Web Search

Monday 20 April 2015

உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார்

Google sites



 ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முன்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வும் தவறு என்று தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நில்லையில் இவ்வழக்கு,

 நாளை 21.04.2015 அன்று கோர்ட் எண் 7ல் 5வது வழக்காக இறுதி விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அரசு தரப்பும் ஆஜாராக டெல்லி விரைந்துள்ளனர்....

 மேலும் இவ்வாதமே இறுதி என்பதால் எல்லா கோப்புகளோடு உச்சநீதிமன்றம் விரைந்துள்ளனர் நாளை காரசாரமான விவாதம் நடைபெறும் என்பதோடு மட்டுமில்லாமல்தீர்ப்புக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....டி.இ.டி தேர்வர்கள் 30,000 பேர் மட்டுமல்லது, பி.எட் பட்டதாரிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் என பலரும் இவ்வழக்கை எதிர்பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment