Web Search

Monday 20 April 2015

மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு?



பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2377 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர்.
 இதற்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கியது.தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணி முடிவடைந் துள்ளது. விடைத்தாள்களின்மதிப்பெண்கள் சிடி மூலம் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்படும். அதன் பிறகு பாட வாரியாக ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

 மதிப்பெண் பட்டியலை தயாரிக்க தேர்வுத் துறைக்கு குறைந்தது இரண்டு வாரங்கள்தேவைப்படும் என்றும் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம்என்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


No comments:

Post a Comment